TNEB:புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது மின்சார வாரியம்.
தமிழகத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் புதிய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB). அதாவது மின் கட்டண கணக்கு எடுத்த உடன் பயனாளரின் கைபேசிக்கு குறுஞ் செய்தி அனுப்பும் அளவுக்கு பல வசதிகளை செய்து இருக்கிறது. அந்த வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் மின்சாரம் தொடர்பான தேவைகள், குறைபாடுகள் நிறைவேற்றும் வகையில் “TANGEDCO” என்ற செயலியை கொண்டு வந்துள்ளது. இதில் மின் தடை,மீட்டர் பழுது, மின் கட்டணம்,மின்னழுத்த பிரச்சனை, மின் திருட்டு ,தீ விபத்து, மின் கம்பங்கள் பாதிப்பு , மின் கம்பிகள் அறுந்தது என பல புகார்களை மின்சார துறையிடம் தெரிவிக்க இந்த செயலி பயன்படுகிறது.
பயனாளர்களின் தேவைகளை நிறைவேற்ற, புகார்களை தெரிவிக்க மின் சாரா துறை அலுவலர்கள் தங்களது கைபேசி ஆப் செய்யக்கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் தான் புதிதாக வீடு கட்டுபவர்களுக்காக ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது மின்சார வாரியம்.
அந்த அறிவிப்பில் தற்போது மழைக்காலம் என்பதால் கட்டிட வேலை நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TANGEDCO ல் உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக புதிய வீடு கட்டுபவர்கள் தங்களுக்கு உள்ள மின்சார குறைகளை தெரிவிக்கலாம்.
இதனால் மின்சார விபத்துக்கள் தடுக்கப்படும், உயிர் சேதங்கள் குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது.