தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பொய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பொய்துவரும் நிலையில் அது இப்பொது தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக வரும் காலங்களில் மழை அளவு அதிகமாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதன் காரணமாக இன்று 21 மாவட்டங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது அதாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.