இசையுலகில் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் விருதுகளின் நாயகனான இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பல படங்களில் பலநூறு பாடல்களை இயற்றி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆக உள்ளார்.
1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையுலகில் கால் பதித்தவர் தான் திலீப் குமார் என்கின்ற ஏ ஆர் ரகுமான்.அந்த ஒரு படம் அடுத்தடுத்து அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டு வரை இவர் இசையமைத்த படங்கள் அனைத்துமே அவருக்கு பிலிம் பேர் விருதை பெற்றுக் கொடுத்தது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதை பெற்றார் ஏ ஆர் ரகுமான்.
ஆஸ்கார் விருது மட்டுமல்லாமல் கோல்டன் க்ளோப் ,பாஃப்டா ஆகிய விருதுகளையும் வென்றிருக்கிறார். சினிமா மட்டுமல்லாமல் பல வெளிநாட்டு கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இவருடைய இசையில் பாட வாய்ப்பு கிடைத்ததா என பலரும் இயங்கிய நிலையில், இவருடைய இசையில் பாடம் அறுத்த பாடகர் எம் எஸ் விஸ்வநாதன் ஆவர்.
ரகுமான் நடிப்பில் வெளிவந்த சங்கமம் படத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடல் ஆன ஆளாளக் கண்டா பாடலை பாடியவர் எம் எஸ் விஸ்வநாதன் தான். முதலில் இவருக்கு இப்பாடலை பாட விருப்பமில்லை என ஏ ஆர் ரகுமான் அவர்களிடம் கூறுவதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு நடந்தது அவரை அப்பாடலை பாட வைத்துள்ளது.
இப்பாடலைப் பாட தனக்கு விருப்பமில்லை என எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் தெரிவிக்க சென்ற நிலையில், ஏ ஆர் ரகுமான் அவர்கள் என்னை வாழ்த்துங்கள் இன்று என்னுடைய பிறந்தநாள். இந்நாளில் நீங்கள் பாடப் போகும் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என என்னை வாழ்த்துங்கள் என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு ஏ ஆர் ரகுமான் அவர்கள் கூறியவுடன் அதனை மறுக்க மனமில்லாமல் பாடலை பாடியிருக்கிறார் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள். இப்படி வெளியான பாடல் தான் இன்றளவும் மக்களுடைய மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது.