இல்லத்தரசிகள் தங்கள் வீட்டு டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு,எண்ணெய் பிசுக்கு,கறைகளை கை வலிக்காமல் சுத்தம் செய்ய இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)காலாவதியான மாத்திரை – ,மூன்று
2)வாஷிங் பவுடர் – இரண்டு தேக்கரண்டி
3)சமையல் சோடா – ஒரு தேக்கரண்டி
4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
5)டீ தூள் சாறு – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் முக்கால் பங்கு தண்ணீர் நிரப்பி கொள்ளவும்.பிறகு அதில் மூன்று காலாவதியான மாத்திரையை போட்டு கரையும்’வரை கலக்குங்கள்.
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி வாஷிங் பவுடர் மற்றும் ஒரு தேக்கரண்டி சமையல் சோடா சேர்த்து கலந்துவிடவும்.
அதற்கு அடுத்து எலுமிச்சம் பழம் ஒன்றை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை தண்ணீரில் பிழிந்து கொள்ளவும்.பிறகு டீ தூள் கொதிக்க வைத்த நீரை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்.இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டு டைல்ஸை துடைத்தால் அழுக்குகள் நீங்கி கண்ணாடி போன்று மின்னும்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளை வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
3)சலவைத் தூள் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு பக்கெட் நீரில் ஒரு தேக்கரண்டி வெள்ளை வினிகர் சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சலவைத் தூள் சேர்த்து கலக்கவும்.இந்த நீரை பயன்படுத்தி வீட்டு டைல்ஸை துடைத்தால் கறைகள்,அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.
வெது வெதுப்பான நீரை கொண்டு டைல்ஸை துடைத்தால் அழுக்குகள் அனைத்தும் எளிதில் நீங்கிவிடும்.