பண்டிகை காலங்களில் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு அதிக பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இப்போது மக்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை என்றாலே மக்கள் மனதில் சந்தோஷம் மகிழ்ந்திடும். தமிழர்களின் பண்பாடு விழாவான பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அதில் உழவர்கள் தனது உழைப்பிற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருவிழா மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த நிலையில் வெளியூரில் இருந்து வேலை செய்யும் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு பண்டிகை காலங்களில் வர பல்வேறு நடவடிக்கைகள் அரசு ஏற்படுத்தி தருகிறது.
அதில் பேருந்து வசதிகள் மிக முக்கியமானதாகும். இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு பொங்கல் வரவுள்ள நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்ய விரும்புவர்கள் அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என இணையதளம் மூலமாகவும் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலியை பயன்படுத்தி டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வெளியூரில் இருந்து வேலை செய்பவர்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து பேருந்தில் ஒரு மாதம் முன்னே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறை இருந்தது. ஆனால் தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்யும் முறை வந்ததால் அரசு விரைவு போக்குவரத்து பேருந்தில் முன்பதிவுக்கான நிலை வெகு சிறப்பாக நடந்து வருகிறது.