2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தவெக!!

0
142
Alliance with AIADMK in 2026 assembly elections.. Thaveka made an important announcement!!
Alliance with AIADMK in 2026 assembly elections.. Thaveka made an important announcement!!

TVK ADMK: 2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வுடன் தவெக கூட்டணி என்ற தகவலை நம்ப வேண்டாமென தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

தவெக மாநாட்டில் விஜய் அவர்கள் தங்களது எதிரி யாரென்று நேரடியாக அவர்களை தாக்கும் வகையில் திமுக மற்றும் பாஜக-வை குறிப்பிட்டு கூறியுள்ளார். இதனையடுத்து கூட்டணியில் தான் ஆட்சி மேலும் அவர்களுக்கு பங்கு உண்டு என்றும் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்ததும் தவெக கட்டாயம் அதிமுக-வுடன் கூட்டணி வைக்கும் என கூறி செய்திகள் வந்த வண்ணமாகக்த்தான் உள்ளது. இதுகுறித்து தற்பொழுது தவெக பொதுச்செயலாளர் தெளிவான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது.

ஆதாரமோ அடிப்படையோ அற்றது. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள். எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Previous articleஇல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! இலவச சிலிண்டர் பெற இதை செய்யுங்கள்!!
Next articleமாமியாரை தீவைத்து எரித்த மருமகள்!! பெட்ரோல்  சப்ளை செய்த கள்ளக்காதலன் விழுப்புரத்தை விழி பிதுங்க  வைத்த கொடூர சம்பவம்!!