பொதுக்கூட்டத்திற்கு வந்தால் ஒரு சேர் இலவசம்!! எப்பிடியப்பட்ட ஐடியா அ.தி.மு.க திட்டம்!!

திருப்பூர்: ஒருவருக்கு ஒரு சேர் இலவசம், அதிமுக பொதுக்கூட்டம் அதிரும் அரசியல் வட்டாரங்கள்.

நாம் பலவிதமான அரசியல் கூட்டங்கள் பாத்திருக்கோம் அதில் பொதுக்கூட்டம் கூட்டத்திற்கு சென்றால் மது, பணம், பரிசு பொருள், புடவை என பல வழிகளில் ஆட்கள் சேர்ப்பது வழக்கம். இந்த மாதிரி திட்டத்தில் மட்டும் தான் மக்களை கவர முடியும் அதுதான் அரசியல் வழக்கம். ஆனல் திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம்  நேற்று மாலை நடந்தபோது ஒரு புதிய யுத்தியை செயல்படுத்தி ஆட்களை சேர்த்தது.

இந்த புதிய ஐடியா நேற்று இரவிலிருந்து சமூக வலைதளங்களில் தீய பரவிகிறது. ஆமாம் அப்படி என்ன புதிதாக ஆட்கள் சேர்க்க அவர்கள் முதலில் புதிதாக 1500 சேர்கள் வாங்கப்பட்டது. சரி இதனால் எப்படி ஆட்கள் சேர்க்க முடியும் என கேட்டால் நீங்க சிரித்து விடுவீர். பொதுக்கூட்டத்திருக்கு  வரும் தொண்டர்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு புதிய சேர் என்ற செய்தி தீ போல பரவி தொண்டர்கள் அதிகமாக காட்ச்சியத்தது. வீட்டிலிருந்த பெண்கள், சிறுவர் சிறுமியர் பலரும் வந்து சேர்களை பிடித்து உட்கார்ந்து இருந்தனர்.

அவரவர் சேரை அவரவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், அ.தி.மு.க., தலைவர்களின் அறுவை பேச்சையும் கேட்டு அமைதியாக சேரில் அமர்ந்திருந்துள்ளனர்.  பின்பு அமைச்சர் பேசிமுடித்த பின் அனைவரும் அவரார் சேர்களை எடுத்து சென்றனர்.  மேலும் இந்த ஐடியா வரும் அரசியல் தேர்தலில் பயன்டுத்துவர்.