சரும பராமரிப்பிற்காக அரிசி மாவு,அரிசி ஊற வைத்த நீர் போன்றவை காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.உங்கள் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க உங்களுக்கான பியூட்டி டிப்ஸ் இதோ.
தேவையான பொருட்கள்:-
1)இரண்டு ஸ்பூன் அரிசி மாவு
2)ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
3)ஒரு ஸ்பூன் ஆலிவேரா ஜெல்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு தேக்கரண்டி அளவு அரிசியை ஒரு கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.
ஒரு மணி நேரத்திற்கு நன்கு ஊறவிட்டு பிறகு தண்ணீரை வடித்து விட்டு அரிசியை ஒரு காட்டன் துணியில் பரப்பி நாள் முழுவதும் காயவிடவும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் கொட்டி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அடுத்து ஜல்லடையில் கொட்டி சலித்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் இந்த அரிசி மாவை கொடி ஒரு தேக்கரண்டி தூயத் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.அதற்கு அடுத்து கற்றாழை மடலில் இருந்து பிரஸ் ஜெல் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அரிசி மாவில் கலந்து கொள்ளவும்.
இந்த க்ரீமை முகம் முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு உலரவிடவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இப்படி தினமும் செய்து வந்தால் முகம் பொலிவு பெறும்.
தேவையான பொருட்கள்:-
1)இரண்டு தேக்கரண்டி அரிசி தண்ணீர்
2)ஒரு வைட்டமின் ஈ மாத்திரை
3)இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றை எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.அதற்கு அடுத்து இரண்டு தேக்கரண்டி அரிசி ஊறவைத்த நீர் சேர்த்து பேஸ்ட்டாக வரும் வரை கலக்கவும்.
அதன் பிறகு ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை அதில் கலந்து முகம் முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து வாஷ் செய்யவும்.இப்படி தினமும் செய்து வந்தால் முகப்பொலிவு அதிகரிக்கும்.