America:அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடைபெற்றது இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் அமெரிக்கா மக்களிடையே அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் செய்து வந்தார். இதனை பெருவாரியான மக்கள் ஆதரவு அளித்து வந்தார்கள் இந்த நிலையில் அவர் வெற்றி பெற்ற உடன் அவரது முழக்கத்தை செயல்படுத்தும் முடிவை கையில் எடுத்து இருக்கிறார்.
அதாவது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஒட்டுமொத்தமாக நாடு கடத்த வேண்டும் என்பதுதான் அதற்கான முன்னெடுப்புகளை கையில் எடுத்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் தற்போது வரை 11 கோடிக்கு அதிகமாக சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் அதிகமானவர்கள் இந்தியர்கள்.
குறிப்பாக குஜராத் மாநிலத்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதனால் அமெரிக்காவில் வாழும் அமெரிக்கா மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். மேலும் அமெரிக்க நாட்டின் டாலர் மதிப்பு அதிகமாக உள்ளதாலும், பிற நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்ட வர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்காக சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகிறார்கள்.
மேலும் இதற்கு முன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஆதரவு கொடுத்தது தவறு என கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்து இருந்தார். இது போன்று ஏற்படாமல் இருக்க டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.