இனிமேல் படத்தின் சென்சார் சான்றிதழ் 6 வகையாக பிரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய தணிக்கை குழு புதிய முறையில் திரைப்படங்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியகியுள்ளது. அதன்ப்படி மத்திய திரைப்பட தணிக்கை குழு தற்போது திரைப்படத்திற்கு யு, ஏ மற்றும் யுஏ என மூன்று வகையில் தணிக்கை தணிக்கை சான்று வழங்கி வருகிறது. ஆனால் இனிமேல் யு, ஏ, யுஏ7 பிளஸ், யுஏ13 பிளஸ், யுஏ16 பிளஸ், என ஆறு பிரிவுகளில் தணிக்கைச் சான்று வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 7 வயது 13 வயது 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் யுஏ ப்ளஸ்7, யுஏ 13 பிளஸ், யுஏ 16 பிளஸ் என அந்தந்த வயதுக்கு ஏற்ற போல் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். மேலும் ஒரு படத்தை குழந்தைகள் பார்க்க ஏற்றதா இல்லையே என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க இந்த சான்றிதழ்கள் அவசியமாக தேவைப்படுகிறது. இந்த சான்றிதழ்கள் cbfcindia.gov.in இந்த இணையத்தின் மூலம் பார்வையிடலாம் என மதிய தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்தால் ஒரு படத்தை யாரு எந்த வயதில் என்ன படம் பாக்கலாம் என்று தெளிவுடன் திரையரக்கு செல்லலாம். எனவே இந்த தணிக்கை குழு இந்த சான்றிதழ் திட்டம் கொண்டுவந்தால் எதிர்காலத்தில் தங்களது குழந்தைகளின் நலனில் நல்ல ஒரு மாற்றம் வரும் இந்த திரைத்துறை மூலம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.