TAMILNADU:சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை ராணுவத்தினருக்கும் தமிழக மீனவர்களுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. அதாவது, தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார். மீனவர்களின் படகுகள் மீன்பிடி வலைகளை செதப்படுத்துவார்கள்.
மேலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவார்கள். சிறையில் தமிழக மீனவர்கள் மிக கொடுமையாக நடத்தப்பட்டார்கள். என இந்த பிரச்சனைகளை ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக என ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு இன்று வரைக்கும் ஒரு முழு தீர்வு
எட்டப்படவில்லை.
இந்த நிலையில் தான் தமிழக மீனவர்களுக்கு எதிராக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு. அதாவது இலங்கையில் தற்போது புதிய அதிபராக திசநாயகே பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி வரும் தமிழக மீன்வர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் தான் இலங்கை அரசால் கைபற்றபட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள், வலைகள் இலங்கையில் மன்னார், மயிலிட்டி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது இலங்கை அரசு அறிவித்துள்ளது.
மேலும் தமிழக அரசு மற்றும் இந்திய அரசிடம் தமிழக மீனவர்கள் இலங்கை அரசிடம் இருக்கும் தங்களது படகுகளை மீட்டு தர கோரிக்கை வைத்து இருந்தார்கள். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள் இராமேஸ்வர மீனவர்கள்.