காதலனை கைக்குழந்தையுடன் தேடி சேலம் வந்த பெண்!! விசாரணையில் அதிர்ச்சி!!

0
204
A woman came to Salem in search of a lover with an infant!! Shocked in the investigation!!
A woman came to Salem in search of a lover with an infant!! Shocked in the investigation!!

Salem new bus stand: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். நீண்ட நேரமாக அவர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எந்த ஒரு பேருந்துகளிலும் அவர் ஏறவில்லை. அதை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண் கூறியது, நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர். என் பெயர் வனிதா என கூறினார்.

மேலும் அவர் காதல் கணவனை தேடி சேலம் வந்ததாக தெரிய வந்தது. அவர் கள்ளக்குறிச்சி பகுதியில் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது கட்டிட தொழிலாளி இன்பரசனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி பின்பு இருவரும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. அப்போது அவரது கணவர் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு அவர் நீண்ட நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அச்சம் அடைந்த அவரது மனைவி அவரது நண்பரை விசாரிக்கும் போது, உங்கள் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி அவருக்கு 2 குழந்தைகள் என உள்ளது என கூறினார். அதை கேட்டு வனிதா அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் அவர் தனது காதல் கணவரை தேடி சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார் என தெரிய வந்தது. பிறகு போலீசார் அவரை காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவரது கணவர் கள்ளக்குறிச்சியில் இருப்பது தெரிய வந்த நிலையில் மீண்டும் அவரை தேடி சென்று விட்டார். 

Previous articleதிரைப்படத்தை தாண்டி  நிஜத்திலும் அஜித்தை எதிர்க்கும் அருண் விஜய்!! அதிர்ச்சியில்  ரசிகர்கள்!!
Next articleஇன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்!! மெத்தைக்கு ஆசைப்பட்டு தலையணையால் உயிரழந்த சோகம்!!