இப்படி பராமரித்தால் இஞ்சி முளைகட்டாது.. மாதங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது!!

0
38
If maintained like this, ginger will not sprout.. It will not spoil even after months!!
If maintained like this, ginger will not sprout.. It will not spoil even after months!!

சைவ மற்றும் அசைவ உணவுகளின் சுவையை அதிகப்படுத்தும் ஒரு பொருள் இஞ்சி.இவை செரிமான பிரச்சனை,வாயுத் தொல்லை,சளி,இருமல் போன்ற பாதிப்புகளை குணமாக்கும் ஒரு சிறந்த மருந்தாகவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பிரியாணி,கறிக்குழம்பு,துவையல் போன்வற்றிற்கு பயன்படுத்தும் இஞ்சியை அதிகமாக வாங்கி வைத்தால் சீக்கிரம் கேட்டுவிடும்.சில இஞ்சிகள் உடனடியாக முளைகட்டிவிடும்.இதனால் நீண்ட நாட்களுக்கு வைத்து இஞ்சியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

அதிகமாக இஞ்சி வாங்கினால் அதை முறையாக பராமரித்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது குறித்த ட்ரிக்கை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் இஞ்சி வாங்கும் பொழுது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.இஞ்சி பழையதா இல்லை புதியதா என்று பார்க்க வேண்டும்.காய்ந்த இஞ்சி வாங்கினால் அவை சீக்கிரம் கெட்டுவிடும்.இதனால் வாங்கும் பொழுதே ப்ரஸ்ஸான இஞ்சியாக பார்த்து வாங்க வேண்டும்.

இஞ்சியில் உள்ள மண்ணை போக்கிவிட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரஸாக இருக்கும்.ஜிப் லாக் கவரில் இந்த இஞ்சியை போட்டு பிரிட்ஜில் வைத்தால் அவை கெடாமல் இருக்கும்.

இஞ்சியை தோல் நீக்கிவிட்டு ஒரு பேக்கிங் தாளில் வைத்து பிரிட்ஜில் உறைய வைக்க வேண்டும்.
இஞ்சியை கவரில் சேமிக்க வேண்டுமென்றால் அதன் மீதுள்ள மண்ணை நீக்க வேண்டும்.இஞ்சியை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பிறகு அதை காட்டன் துணியில் துடைத்துவிடவும்.பிறகு இதை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்து சேமித்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

Previous articleவலுவான கூந்தலுக்கு மஞ்சள் எண்ணெய் யூஸ் பண்ணுங்க!! நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!
Next articleலெமன் டீ நல்லது தான்.. ஆனால் இந்த உணவுகளுக்கு பிறகு தப்பி தவறியும் அதை குடிச்சிடாதீங்க!!