Gold News: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. மேலும் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.1,680 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் மீதான காதல் எந்த நிலையிலும் மக்களுக்கு மாறவே மாறாது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதை எப்படி வாங்குவது பற்றியே கவலையில் இருப்பார்கள். தங்கமும், வீட்டு நிலமும் வாங்கி போட்டால் எப்போதும் அதன் மதிப்பு அதிகம் என கூறுவார்கள்.
அந்த நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்து மட்டுமே செல்கிறது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி ரூ.101-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த மாதம் 30ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.59,000த்தை தாண்டி விற்பனை செய்தது.
இது நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகையின் விலை மக்கள் குறையும் என எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் விலை ஜெட் வேகத்தில் பாய்ந்து கொண்டே செல்கிறது. இப்படி தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் தங்கம் விலை தொடர்ந்து நான்கு நாட்கள் குறைந்தது. பின் இப்போது தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.