மழைக்காலங்களில் பல்லி,கரப்பான் பூச்சி போன்றவற்றின் தொல்லை அதிகமாகவே வீட்டில் இருக்கும்.இதை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றி பலனடையுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)கிராம்பு(இலவங்கம்) – 10
2)கற்பூரம்(சூடம்) – ஒன்று அல்லது இரண்டு
செய்முறை விளக்கம்:
முதலில் அகலமான பக்கெட்டில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு 10 மிளகு மற்றும் 2 கற்பூரத்தை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இதை பக்கெட் நீரில் கொட்டி கலந்து விடுங்கள்.இந்த நீரை கொண்டு வீட்டுத் தரை,கிட்சன் செல்ப்,ஜிங்க் உள்ளிட்ட பகுதிகளில் துடைத்தால் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துள்ள எலுமிச்சை மற்றும் உப்பு கரைசலை அதில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை வைத்து தரை,வீட்டின் மூலை முடுக்குகளில் துடைத்தால் பல்லி,கரப்பான் பூச்சி மற்றும் ஈ போன்றவை வீட்டிற்குள் நுழையாது.
தேவையான பொருட்கள்:
1)சமையல் சோடா – ஒரு தேக்கரண்டி
2)வினிகர் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி சமையல் சோடா அதாவது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து கலந்து வீட்டை துடைத்தால் கரப்பான் பூச்சி,பல்லி மற்றும் பூச்சிகள் தொல்லை கட்டுப்படும்.