TVK: தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை விஜய் தொடங்கி அவரின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் நேரில் அழைத்து விருதளித்து உள்ளார். மேலும் பந்தல் அமைத்த விஸ்வநாதனுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எதிர்பார்ப்புகளை மிஞ்சி மிக சிறப்பாக விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாடு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தவெக முதல் மாநாடுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பல லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். அந்த நிலையில் அந்த மாநாடு நடக்க பல்வேறு பகுதிகளில் இடம் பார்க்கப்பட்டது.
கடைசியாக சேலம் மற்றும் திருச்சியிலும் இடம் பார்க்கும் போது பல இடையூறு காரணமாக பலர் இடம் தர மறுத்து விட்டனர். இறுதியில் விக்கிரவாண்டியில் மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் என அனைவரையும் அழைத்து விருந்தளித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
மிக முக்கியமாக பந்தல் அமைத்த விஸ்வநாதனை அழைத்து தங்கம் மோதிரம் பரிசளித்துள்ளார். மேலும் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்கள் கூறியதாவது, விஜய் மாநாட்டுக்கு நிலம் உறுதியான போதே அவர் நிச்சயமாக உங்களை அழைத்து நன்றி தெரிவிப்பேன் என கூறியதை நிறைவேற்றியுள்ளார் என கூறினார்கள். மேலும் விஜய் மாநாட்டில் ஏற்றிய 100 அடி உயர கொடி ஐந்து ஆண்டுக்கு அப்படியே இருக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.