மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரில் கொசுப்புழுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது.இதனால் கொசு பரவல் அதிகமாகி டெங்கு,மலேரியா போன்ற நோய்த் தொற்று பரவல் அதிகமாகிறது.
மழைக்காலத்தில் வீடுகளின் மூலை முடுக்குகளில் கொசுக்கள் பதுங்கி நம் இரத்தத்தை குடிக்கிறது.குறிப்பாக இரவு நேரங்களின் இதன் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது.இதனால் இரவு நேரத்தில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் போகிறது.வீட்டில் இருந்து கொசுக்களை வெளியேற்ற குட் நைட்,ஆல் அவுட் போன்ற இரசாயன லிக்விட் பயன்படுத்தப்படுகிறது.
இந்த லிக்விட்டில் இருந்து வெளியேறும் கெமிக்கலை நுகர்வதால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.கொசுக்களை விரட்டும் இரசாயன லிக்விட்டால் சுவாசம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள்,ஆஸ்துமா,தலைவலி,சைனஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே கொசுக்களை அகற்ற இயற்கை வழியில் தீர்வு காணலாம்.ஒரு பல் வெள்ளை பூண்டை இடித்து சாறு எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து வீட்டில் தெளித்தால் கொசுக்கள் வருவது கட்டுப்படும்.
ஒரு மண் விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு வெள்ளைப்பூண்டை இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு விளக்கில் திரி போட்டு பற்ற வைத்தால் அதன் வாசனைக்கு கொசுக்கள் நடமாட்டம் குறையும்.
வேப்ப இலை மற்றும் வெள்ளைப்பூண்டை இடித்து சாறு எடுத்து ஒரு கப் நீரில் கலந்து ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் ஒழியும்.பூண்டு எண்ணெயை நீரில் கலந்து தெளித்தால் கொசுக்கள் வராமல் இருக்கும்.
பூண்டு வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது.எனவே பூண்டு பயன்படுத்தி கொசுக்களை அடியோடு ஒழிக்கலாம்.