சூப்பர் ஸ்டார் பாராட்டிய படம்!! வாய்ப்பை தவறவிட்ட ஆர்ஜே பாலாஜி!!

0
124
Superstar praised the film!! RJ Balaji missed the opportunity!!
Superstar praised the film!! RJ Balaji missed the opportunity!!

ரேடியோ ஜாக்கியியாக தன்னுடைய பயணத்தை துவங்கிய ஆர்.ஜே பாலாஜி அவர்கள், தன்னுடைய திறமையாலும் விடாமுயற்சியினாலும் என்று பல படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் , புதிதாக இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.

சினிமா துறையில் வளர்ந்து வரும் இவர் தனக்கு வந்த பட வாய்ப்பு என தவற விட்டுவிட்டு தற்பொழுது வருந்தி வருகிறார். இது குறித்த செய்தியினை இந்த தொகுப்பில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

2019 ஆம் ஆண்டில் எல்கேஜி படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தவர் ஆர் ஜே பாலாஜி. இதற்கு முந்தைய திரைப்படங்களில் இவர் காமெடி நடிகராக நடித்து வந்தார். இந்த படத்தினை தொடர்ந்து வீட்டுல விசேஷம், மூக்குத்தி அம்மன் மற்றும் சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆர் ஜி பாலாஜியின் நடிப்பில் சொர்க்கவாசல் என்ற படம் வருகிற நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகயுள்ளது. அதன் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து சூர்யா 45 படத்தினை இவர் இயக்க உள்ளார் என்ற தகவலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படத்தினை வெகுவாக பாராட்டி இருந்தார். இந்த படத்தில் முதலில் நடிப்பதற்காக அயோத்தி பட இயக்குனர் ஆர் ஜே பாலாஜியை தான் கேட்டிருக்கிறார். சில காரணங்களுக்காக ஆர்.ஜே பாலாஜி இந்த பட வாய்ப்பினை தவிர்க்க இந்த வாய்ப்பானது நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமாருக்கு சென்றுள்ளது. இத்திரைப்படம் வெளிவந்த பெரிய பாராட்டினை பெற்ற பிறகு இன்று வரையில் இதனை தவற விட்டு விட்டோமே என்று ஆர் ஜே பாலாஜி அவர்கள் வருந்துவதாக கூறியிருக்கிறார்.

Previous articleதன்னுடைய வாழ்வின் தனிமை குறித்து மனம் திறக்கும் செல்வராகவன்!!
Next articleசிவகார்த்திகேயனுக்கு மறுக்கப்பட்ட சீரியல் வாய்ப்பு!! காரணம் கூறும் தீபக்!!