முகம் அழகாக இருக்க முக்கிய காரணம் உதடுகள் தான்.உதடுகளில் வெடிப்பு,கருமை இல்லாமல் மிருதுவாக இருக்க பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் அனைவருக்கும் உதடுகள் சிவப்பாக இருப்பதில்லை.உதடுகளின் மீதுள்ள கருமை நீங்கி அவற்றை அழகாக மாற்ற ஹோம்மேட் லிப்பாம் தயாரித்து பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
3)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று
4)தேன் – அரை தேக்கரண்டி
5)தேன் மெழுகு – ஒரு தேக்கரண்டி
6)பீட்ரூட் சாறு – ஐந்து தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு அதன் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கற்றாழை மடலின் தோலை நீக்கிவிட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து குறைவான தீயில் சூடுபடுத்தவும்.அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் அரைத்த பீட்ரூட் சாறை அதில் சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு அடுப்பை அணைத்து பீட்ரூட் சாறை லேசாக ஆறவிடவும்.பிறகு அதில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் மெழுகு மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு அதில் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலக்கி ப்ரீஸரில் மூன்று மணி நேரம் வைக்கவும்.
இவ்வாறு செய்தால் லிப் பாம் கெட்டியாகிவிடும்.இதை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.பிறகு இதை உதடுகளுக்கு தடவவும்.இப்படி தினமும் செய்து வந்தால் உங்கள் கருமையான உதடு சிவப்பாக மாறும்.