ஹார்ட் அட்டாக் வரக்கூடாதா? இந்த 3 மாத்திரையை கையில வச்சிக்கோங்க!!

0
221
Precautions to Avoid Heart Attack
Precautions to Avoid Heart Attack

Heart attack:ஹார்ட் அட்டாக்கில்  இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி கூறப்பட்டுள்ளது.

பொதுவாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இதெல்லாம் இதய நோயுடன் சம்பந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தால்தான் ரத்த அழுத்தம் இருந்தால் மாரடைப்பு, நெஞ்சு வலி வர வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். எனவே, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம் ஆகும். இதயத்தில் பிரச்சனைகள் உள்ளவர்கள் கூட தங்களது சுகர் லெவல், கொலஸ்ட்ரால் லெவல் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மாரடைப்பு ஏற்படும் சமயத்தில் “கோல்டன் ஹவர்” என்று கூறப்படும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உயிரைக் காக்கும் 3 மருந்துகளைத் தங்கள் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருப்பது நல்லது என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள். இதுகுறித்து மருத்துவர் லாவண்யா அருண் கூறியபோது, “மாரடைப்பு ஏற்பட்டவரின் உயிரைக் காக்க இந்த 3 மாத்திரைகள் இருந்தால் போதுமானது.

அவை “ஆஸ்பிரின் (ASPIRIN) 300 எம் ஜி, குலோபிடோகிரேல் (CLOPODOGREL), ஸ்டாடின் (STATIN) 80 எம் ஜி”. இவற்றைத் தனித்தனியாக வைத்துக் கொண்டாலும் அல்லது 3 மருந்துகளும் கலந்த ஒரே மாத்திரையாக வைத்துக் கொண்டாலும் நல்லது தான். மாரடைப்பு ஏற்படும்போது இந்த 3 மாத்திரைகளைப் போட்டுக் கொண்டாலும் உடனே மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். ஏனென்றால், இந்த மாத்திரை உயிரைக் காக்க சில காலதாமதங்களை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.

மாரடைப்புக்கும்(cardiac arrest), ஹார்ட் அட்டாக்-க்கும் அதிக வித்தியாசம் உள்ளது. மாரடைப்பு என்றால் இதயத்துடிப்பு நின்றுவிடும் நிலையாகும். அப்போது நுரையீரலின் செயல்பாடும் நின்றுவிடும். இதனால் மூச்சும் இருக்காது, இதயத் துடிப்பும் இருக்காது. உடம்பு சட்டென்று ஜில்லாகிவிடும், கண்கள் பெரிதாகிவிடும். இதயத்துடிப்பு நின்று ஒருவர் மயங்கிவிட்டால் அவருக்கு சிபிஆர் சிகிச்சை உடனே கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதன் மூலம் இதயத்துடிப்பைக் கொண்டு வர முடியும்.

நெஞ்சில் 15 முறை அழுத்தம் கொடுத்த பிறகு 2 முறை வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுக்க வேண்டும். இதுதான் இதயத்துடிப்பு நின்றவர்களுக்கு முதலுதவியாக செய்யக்கூடியது. அவருக்கு இதயத்துடிப்பு வந்தவுடன் தேவையான மருந்துகளைக் கொடுத்தால் அவருடைய உயிரை காக்கலாம். ஹார்ட் அட்டாக் என்பதும் ஒரு அவசர நிலைதான். ஹார்ட் அட்டாக் வந்தால் நெஞ்சு வலி வரும் என்பது கிடையாது.

சிலருக்கு இடது புறத்தின் தோள்பட்டையில் வலி ஏற்படும். கழுத்துப் பகுதி, தொண்டை பகுதிகளில் இறுக்கமாக உணரப்படுவது, வாந்தி, அதிகமாக வியர்த்தல் இவையெல்லாம் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் ஆகும்” என்று கூறியுள்ளார்.

Previous articleகவர்மெண்ட் வேலை வாங்க புதிய கண்டிஷன்!! தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி நடவடிக்கை!!
Next articleபிரதமருக்கு அதிகாரம் இல்லை .. IAS, IPS அதிகாரிகளை நிக்க முடியாது.. சட்டம் சொல்லும் செய்தி என்ன?