தலையில் ஒரு முடி கூட இனி உதிராது!! 100% கேரண்டி தரும் “ரைஸ் வாட்டர்”!!

0
73
Not even a single hair on the head will fall out!! 100% Guaranteed "Rice Water"!!
Not even a single hair on the head will fall out!! 100% Guaranteed "Rice Water"!!

முடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியான கூந்தலை பெற ரைஸ் வாட்டர் தயார் செய்து தலைக்கு பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

1)அரிசி – ஐந்து தேக்கரண்டி
2)தண்ணீர் – அரை கப்

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஐந்து தேக்கரண்டி அரிசி சேருங்கள்.புழுங்கல் அல்லது பச்சரிசி எதுவாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.

அரிசி சேர்த்த பிறகு அரை கப் அளவு சுத்தமான தண்ணீரை அதில் ஊற்றி கொள்ளுங்கள்.பிறகு கிண்ணத்தை ஒரு தட்டு போட்டு மூடி 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள்.

அரிசி நன்கு ஊறியதும் தண்ணீர் மற்றும் அரிசியை தனி தனித்தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.அதற்கு முதலில் ஒரு கிண்ணம் எடுத்து அரிசி ஊற வைத்த நீரை அதில் வடிகட்டி கொள்ளுங்கள்.

இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்.இதை தலைமுடியில் ஸ்ப்ரே செய்துவிடுங்கள்.அரிசி வாட்டர் பயன்படுத்தும் பொழுது கூந்தலில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கக் கூடாது.நீங்கள் தலைக்கு குளித்து முடி ட்ரை ஆனதும் இந்த ரைஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.

தலைக்கு ரைஸ் வாட்டர் பயன்படுத்தி கைகளால் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் கூந்தலை அலசிக் கொள்ளுங்கள்.இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் தலை முடி உறுதியாக வளரும்.முடி உதிர்வு ஏற்படுவது குறையும்.

Previous articleகரப்பான் பூச்சிகளை விரட்ட.. கெமிக்கல் மருந்து வேண்டாம்!! ஒரு பச்சை மிளகாய் போதும்!!
Next articleகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் ஹோம் மேட் சத்துமாவு உருண்டை!!