இன்றைய காலத்தில் சரும பராமரிப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது.சருமத்தில் உள்ள அழுக்குகள்,பருக்கள்,எண்ணெய் பிசுக்குகள் நீங்கி சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள பலரும் விரும்புகின்றனர்.
ஆனால் இக்காலத்தில் சரும பராமரிப்பு சவாலான ஒரு விஷயமாக உள்ளது.காற்று மாசு,பயணம் போன்றவற்றால் சருமம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இந்த சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள பப்பாளி பழம் பயன்படுத்தலாம்.
பப்பாளி சோப்,பப்பாளி க்ரீம் என்று கடைகளில் விற்கும் பொருட்களை தவிர்த்து இயற்கையான பப்பாளி பழத்தை வைத்து பேஸ்ட் செய்து முகத்திற்கு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சரும பிரச்சனைகளை போக்கும் பப்பாளி பழ பேஸ்ட் தயாரிப்பது எப்படி?
தேவைப்படும் பொருட்கள்:
1)பப்பாளி பழம்
2)பால்
செய்முறை விளக்கம்:
முதலில் கனிந்த பப்பாளி பழம் ஒன்றை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் காய்ச்சாத பசும் பால் சிறிதளவு சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பப்பாளி க்ரீமியாகும் வரை அரைத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டு பப்பாளி பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்யவும்.
அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் சரும வெடிப்பு,பருக்கள்,எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளிட்டவை முழுமையாக நீங்கி முகம் அழகாக மாறும்.