RBI:10,20 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் ஆகும். இதை வாங்க மறுத்தால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என RBI தரப்பு தெரிவித்து இருக்கிறது.
சென்னையில் 10,20 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிக அளவில் உள்ளது. இவைகளின் மாற்றாக 10,20 நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் சென்னையை தவிர பிற மாவட்டப் பகுதிகளில் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது.அதற்கு காரணமாக 10,20 நாணயங்கள் செல்லாக் காசாக பார்க்கப்படுகிறது.
சென்னையை தவிர மற்ற பகுதிகளில் சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை இந்த காசுகள் வாங்குவதை தவிர்த்தனர்.குறிப்பாக அரசு பேருந்துகளில் 10,20 நாணயங்களை வாங்குவதில்லை. இந்த நாணயங்கள் தொடர்ந்து மறுக்கப்படுவதால் ரிசர்வ் வங்கி ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. அதில் இந்த 10,20 நாணயங்கள் என்பது இந்திய அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நாணயங்கள் ஆகும்.
இதை வாங்க மறுப்பது குற்றம் ஆகும். மேலும் 10,20 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் சிறை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த சிறை தண்டனை ஹைதராபாத் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. மேலும் 10,20 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது ஐபிசி பிரிவு 124 ன் கீழ் புகார் அளிக்கலாம் என தெரிவித்து இருக்கிறது.
இந்த 10,20 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என போய் தகவலை சமூக வலைதளத்தில் பரப்புவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனா RBI தெரிவித்து இருக்கிறது.