FSSAI – “உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்”, இது இந்திய “குடும்ப நல அமைச்சகத்தால்” நிர்வகிக்கப்படும் அமைப்பு ஆகும். உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் “சட்டம் 2006” என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்க பட்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் தரமான உணவை வழங்கி மக்களின் நலத்தை பாதுகாப்பது. இந்த அமைச்சகம் தற்போது உணவு இறக்குமதி சோதனையை கடுமையாக்கி உள்ளது.
இதன் நோக்கம் உணவினால் மக்களை பாதிக்கும் அபாயங்களில் இருந்து தடுப்பதும், உணவு இறக்குமதி நடைமுறையில் தரம் அறிதல் மற்றும் வெளிப்படைத்தன்மை மேம்படுத்துவதும் ஆகும். தரம் குறைந்த உணவுகளை பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்து அபாயங்களை தடுப்பதற்கும், பொது சுகாதார பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இது உதவுகிறது.
சில உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு “முன் அனுமதி” கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன் அனுமதி இல்லாமல் இருந்தால், அதனை நிராகரிப்பு செய்யும் நிலை ஏற்படும். இந்தியா உணவு இறக்குமதி சோதனைகளை கடுமைக்கியுள்ளதால், இலங்கை, பங்களாதேஷ், ஜப்பான், துருக்கி, சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் உணவு பொருட்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இலங்கையில் இருந்து வரும் “இலவங்கப்பட்டை மொட்டு” போன்ற சில பொருட்கள், தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்தியா இந்த கட்டுப்பாடுகளை எளிதாக்கவும், பிற நாட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் விரைவான தகவல் பகிர்வை நடைமுறைப்படுத்த “(FIRA)” போர்ட்டலை FSSAI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நம் நாட்டு மக்களின் உணவின் தரத்தை இந்த அமைப்பு பாதுகாத்து வருகிறது.