ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா இருவரும் திரும்ப பெற்ற விவாகரத்து!! விளக்கம் தரும் அந்தணன்!!

0
666
AR Rahman and Saira's Divorce Returned!! Anthanan who explains!!
AR Rahman and Saira's Divorce Returned!! Anthanan who explains!!

2024 ஆம் ஆண்டு தொடங்கிய முதலே பல திரைப் பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்து குறித்து தெரிவித்து வருகின்றனர். உச்ச நடிகர் முதல் இசையமைப்பாளர்கள் வரை என இந்த விவாகரத்தானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தான் ஏ ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா தன்னுடைய வழக்கறிஞர் மூலம் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து விவாகரத்து பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் அவர்களும் மன வருத்தத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தார்.

இவர்கள் தங்களுடைய விவாகரத்தை தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஏ ஆர் ரகுமானின் மேன்டில் உள்ள பேசிஸ்ட் அவருடைய விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டார். இதனால் ஏ ஆர் ரகுமான் அவர்களுடைய விவாகரத்து ஆனது மிகப்பெரிய சர்ச்சையாக உருவானது.

தொடர்ச்சியாக பலரும் அவதூறுகளை பரப்பி வந்த நிலையில் ஏ ஆர் ரஹ்மான் தன் மீது ஆதாரமில்லாமல் பேசும் யூட்யூப் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் வெளியிட்டார்.

பலரும் பலவிதமான கருத்துக்களை விமர்சனங்களை இவர்கள் மீது வைத்த வண்ணம் இருந்தனர். ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா இருவரும் அதற்கு பதில் அளித்த வண்ணம் இருந்து வந்த நிலையில், தற்போது இதற்கு முடிவு கட்ட நினைத்துள்ளனர்.

இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

யோசிக்காமல் சாய்ரா பானு இதை அறிவித்து விட்டதாகவும், இந்த விஷயத்தை வழக்காக மாற்ற வேண்டாம். வாபஸ் வாங்கிவிடவும் முடிவெடுத்து இருப்பதாக பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎலக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 100% சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் இலவசம்!!
Next article“ரெட் அலர்ட்” எச்சரிக்கை! தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!