சவுதி அரேபியா: 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
18-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 2025-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பத்து அணிகள் தங்களது வீரர்களை தக்க வைப்பதற்கும் விடுவிப்பதும் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. அதில் இந்த பத்து அணிகளும் மொத்தம் 46 வீரர்கள் அவர்களை தக்க வைத்துள்ளனர். மேலும் 182 வீரர்கள் விடுவிப்பு செய்துவிட்டனர். இந்த விடுவிப்பு செய்த வீரர்கள் இந்த பத்து அணிகள் மாற்றி ஏலம் கூறி எடுத்துக் கொண்டனர். இந்த ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முடிந்தது.
இந்த இரண்டு நாட்கள் நடந்த மெகா ஏலம் 182 வீரர்களுக்காக கிட்டத்தட்ட 639.15 கோடி 10 அணிகள் உரிமையாளர்கள் செலவிட்டு வாங்கியுள்ளனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடி என்.எஸ்.ஜி அணி வாங்கியுள்ளது. இரண்டாவதாக ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. மூன்றாவதாக வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கு கே.கே.ஆர் அணி வாங்கி உள்ளது. இந்த மூவர் மட்டும் தான் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள் ஆவார்.
மேலும் இளம் வீரர் என வைபப் சூரியவன்ஷி (வயது 13) ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திரா சாஹல் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. மேலும் இந்திய வேகம் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ரூ10.75 கோடிக்கு ஆர்.சி.பி அணி அவரை வாங்கியது.