கோவையில் இருந்து வெளியூர் சென்று வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது அதில் பலரும் தான் எங்கு சென்றார்கள் யார் யார் உடன் தொடர்பில் இருந்தார்கள் போன்ற தகவல்களை கொடுக்க மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதனால் சுகாதாரத்துறை அலுவலர்களால் கொரோனா தொற்று எப்படி வந்தது யார் மூலம் வந்தது உள்ளிட்ட தகவல்களை திரட்ட முடியாமல் போகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நிபுணர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தான் எங்கு எங்கெல்லாம் சென்றார்கள், குறிப்பாக சென்னை சென்றார்களா? யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்ற தகவலை கூற மறுத்து விடுகின்றனர்.
இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறிய முடியாமல் போகிறது. இதனால் தகவல் தெரிவிக்காத நபர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் எங்கு சென்றார்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கண்டறிய அவர்கள் செல்போன் எண்ணை டிராக் செய்ய முடிவு செய்துள்ளோம் அப்படி டிராக் செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.