ஒட்டகங்களுக்கு பாம்பை உணவாக கொடுக்கும் நடைமுறை.. பாம்பை உணவாக கொள்ளும் ஒட்டகங்களின் நிலை என்ன?

0
104
The practice of feeding snakes to camels.. What is the condition of camels that feed snakes?
The practice of feeding snakes to camels.. What is the condition of camels that feed snakes?

ஒட்டகங்களின் உணவு பட்டியலில் காய்கறிகள், பழங்கள், மற்றும் இலைகள் போன்றவை இருக்கும். சில இடங்களில் ஆச்சரியத்தைத் தரும் வகையில் உயிருள்ள பாம்புகளை ஒட்டகங்களுக்கு உணவாக வழங்கும் நடைமுறை புழக்கத்தில் உள்ளது. இந்த நடைமுறை பல காலமாக தொண்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அச்சுறுத்தும் நடைமுறை மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்படுகிறது. “ஹம் என்ற நோயால்” பாதிக்கப்பட்ட ஒட்டகங்கள் உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் அருந்தாமலும் இருக்கும் நிலைக்கு செல்கிறது.

இந்த நோயால் ஒட்டகங்கள் பலவீனமடைந்து நடக்க முடியாமலும் சோர்வுடவும் காணப்படுகின்றன. எனவே இதை வளர்க்கும் உரிமையாளர்கள் உயிருள்ள பாம்புகளை ஒட்டகத்தின் வாயில் வைத்து அதை உட்கொள்ள வைக்கின்றனர். உயிருள்ள பாம்பை உணவாக கொடுப்பதால், பாம்பில் உள்ள விஷங்கள், ஒட்டகத்தின் உடலில் ஆன்டிபயாடிக்குகளை அதிகப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த விஷத்தை உட்கொண்ட ஒட்டகங்கள் நோயை எதிர்த்து போராடும் ஆற்றலைப் பெறுவதாகவும் கூறுகின்றனர்.

பாம்பை உணவாக உட்கொண்ட ஒட்டகத்தின் உடலில் பாம்பின் விஷத்தின் வீரியம் சென்றடைந்து, வீரியம் குறைந்த உடன், ஒட்டகம் தண்ணீர், உணவு போன்றவற்றை உட்கொள்ள ஆரம்பிக்கிறது என்றும், முழுமையாக பழைய நிலைக்கு திரும்புகிறது என்றும் உரிமையாளர்கள் கூறுகிறார்கள். இதனால் பாம்புகள் ஒட்டகத்திற்கு உணவாக வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் ஒட்டகத்தின் உணவு பட்டியலில் பாம்பு இடம் பெறவில்லை, ஒட்டகத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை பெற வேண்டும் என்பதற்காக உரிமையாளர்கள் பாம்பை ஒட்டகங்களுக்கும் உணவாக வழங்குகின்றனர்.

Previous articleவந்தது புதிய டிஜிட்டல் பேங்கிங் விதிகள்!! இதை தெரியாமல் தப்பி தவறியும் பணம் அனுப்பாதீர்கள்!!
Next article2025 ஆம் ஆண்டில் பொங்கலுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு!! மகிழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!!