அவர் முதுகை அவர் திரும்பி பார்க்கட்டும்!! துணை முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்!! 

0
71
Let him turn his back!! Former Minister who responded to the Deputy Chief Minister!!
Let him turn his back!! Former Minister who responded to the Deputy Chief Minister!!

அதிமுக குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சேலத்தில் இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் போதும். அதிமுக கட்சியையே பாஜகவுடன் இணைத்து விடுவார் இபிஎஸ் என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பெரிய கட்சியில் சில சமயங்களில் கள ஆய்வு நடைபெறும் பொழுது ஒரு சில சம்பவங்கள் இதுபோல நடக்கத்தான் செய்யும் என உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார்.

வருகின்ற டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவஞ்சலி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான அனுமதி வழங்க கோரி மனு கொடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் அருணை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,

நாம் தவறு செய்தால் உடனடியாக காவல்துறையினர் நீதிமன்றம் மூலமாக நமக்கு தண்டனை கொடுப்பார்கள் என்ற எண்ணம் தமிழகத்தில் தற்போது இல்லை. இதன் காரணமாக குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்துள்ளது.. தமிழகத்தில் தற்போது நடப்பது கரையான் ஆட்சி.

அதிமுக என்பது மிகப்பெரிய ஜனநாயக கட்சி.  பெரிய கட்சிகளில் கள ஆய்வு நடைபெறும் பொழுது சில சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அது சகோதரர்களுக்கு இடையே நடக்கும் மோதல் போன்றது. நாளடைவில் அது சரியாகிவிடும். ஆனால் அதனை விமர்சனம் செய்வதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஏன் அவர்கள் கட்சியிலும் இதுபோல் சம்பவங்கள் நடந்ததில்லையா?? முதலில் அவர் தனது முதுகை திரும்பி பார்க்கட்டும்.

பணம் கொடுத்து தான் கூட்டணி ஆட்சி அமைக்கும் எண்ணம் எப்பொழுதும் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவை தேடி தான்  கூட்டணிக்கு வருவார்கள். எப்போதும் ஜெயிக்கிற குதிரையில்தான் பந்தயம் கட்டுவார்கள். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் போன்றவர்கள் அதிமுக பொதுக்குழு எடுத்த ஒருமித்த முடிவு மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் குடும்பத்தை தவிர்த்து  வைத்தியலிங்கம் போன்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்தும் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Previous articleஅஜித்தின் திடீர் முடிவு!! உலக அளவில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்!!
Next articleதொடர்ந்து சரியும்  தங்கம் விலை!! இப்போது தங்கம் வாங்கலாமா!! நிபுணர்கள் சொல்வது என்ன?