1990 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் இத்திரைப்படம் வெளியானது.முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் (திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு) நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு ஆகும்.
இத்திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். திரைப்படத்தில் சுந்தரி நீயும், பேரு வச்சாலும், கதை கேளு மற்றும் ரம்பம்பம் போன்ற ஏராளமான பாடல்கள் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
அதிலும், சுந்தரி நீயும் எனும் பாடல் மலையாள மொழியில் புனையப்பட்டது. இதுவே இந்திய திரைப்பட வரலாற்றிலேயே மெதுவாக இயக்கப்பட்ட பாடல் ஆகும்.
பேரு வச்சாலும் வைக்காம போனாலும் என்னும் பாடலின் மெட்டமைக்கும் பொழுது மெட்டு அமைத்துவிட்டு இளையராஜா டட்டகாரத்தை வாலி அவர்களுக்கு பாடி காண்பித்த பொழுது வாலி அவர்கள் இதற்கு எப்படி பாடல் எழுதுவது என்று கூறியுள்ளார். பின்னர் இளையராஜா அவர்கள் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்.. தூஉம் மழை” என்னும் திருக்குறளைப்பாடி இப்பாடிலின் மெட்டின் சந்தத்தை விளக்கியுள்ளார். பின்னர் வாலி அவர்கள் பேரு வச்சாலும் வைக்காம போனாலும் பாடல் வரிகளை எழுதி கொடுத்துள்ளார்.
இப்படியாக இந்த படத்தில் இப்பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டிருக்கின்றன. ஆனால் இத்திரைப்படத்திற்காக எழுதப்பட்ட இரண்டு பாடல்கள் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. அது ஆடிப்பட்டம் தேடிச் சம்பா விதை போடு என்ற பாடல் படத்தின் நீளம் கருதி படத்தில் இடம் பெறவில்லை. இந்த பாடலினை பாடகர் மனோ மற்றும் சித்ரா அவர்கள் பாடியுள்ளனர். மேலும் இப்படத்தில் இடம்பெறாத மத்தாப்பூ என்ற பாடலை பாடகி சித்ரா அவர்கள் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.