உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சாலை போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதனால் நம் நாட்டில் சாலைகள்,மேம்பாலங்கள் நவீன மையமாக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது கிராம புறங்களிலும்,மலை கிராமங்களிலும் சாலை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் சாலை விபத்துகள் குறையாமல் இருப்பது கவலை அளிப்பவையாக உள்ளது.
குறிப்பாக நம் தமிழகத்தில் நாள்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் மக்கள் தொகையில் ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் ஆண்டுதோறும் 65000க்கும் மேற்பட்ட சாலைவிபத்துகள் பதிவாகி வருகிறது.இதன் காரணமாக அரசு அவ்வப்போது போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகிறது.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை இயக்குதல்,மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல்,அதிவேகமாக வாகனம் இயக்குதல்,தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்குதல்,உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்குதல் போன்ற பல விதி மீறல்களுக்கு வாகனம் பறிமுதல்,அபராதம்,சிறைத்தண்டனை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் ரூ.5,000,ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகு வாகனங்களை இயக்கினால் ரூ.5,000,வாகன காப்பீடு இல்லையென்றால் ரூ.2,000,காற்று மாசுபாடு விதிமுறைகளை மீறினால் ரூ.400 அபராதம் என்று போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இதுபோன்ற பல்வேறு அபராதங்கள் விதிக்கப்படுகிறது.
எனவே நீங்கள் வாகனங்களை இயக்குவதற்கு முன்னர் ஆர்சி புக்,இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை வைத்துள்ளீர்களா என்பதை செக் செய்து கொள்வது நல்லது.கார் இயக்குபவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவதை தவிர நாம் எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் ஆர்சி புக்,இன்சூரன்ஸ்,PUC சான்றிதழ்,ஆதார் மற்றும் பான் கார்டு.
சில சமயங்களில் ஆதார்,பான் போன்றவை தேவைப்படக் கூடும்.இந்த ஆவணங்கள் அனைத்தையும் உங்கள் மொபைலில் DigiLocker,mParvahan போன்ற செயலிகளில் சேமித்து வைத்துக் கொண்டால் தக்க சமையத்தில் உதவியாக இருக்கும்.