“முன்பே கணித்தாரா தனுஷ்”! .. “நயன்தாராவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய கேரள நீதிமன்றம்”..!

0
102
"Did you calculate before Dhanush"! .. "Kerala court ruled against Nayanthara"..!
"Did you calculate before Dhanush"! .. "Kerala court ruled against Nayanthara"..!

“நானும் ரௌடி தான்” என்ற படத்தில் நயன்தாரா அவர்கள் நடிகர் “விஜய் சேதுபதியுடன்” நடித்திருந்தார். இந்த படத்தை, தனுஷ் தயாரிப்பில் “, இயக்குனர் “விக்னேஷ் சிவன்” இயக்கியிருந்தார். இந்த படம் “2015 ல்” வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படப்பிடிப்பில் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே “காதல் உருவானதாக” சொல்லப்படுகிறது. இந்த படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை தனது “திருமண ஆவண படத்தில்” பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, நயன்தாரா அவர்கள், தயாரிப்பாளரான தனுஷ் அவர்களிடம் அனுமதி அளிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் தரப்பிலிருந்து அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது “திருமண ஆவண படத்தின் ட்ரைலரில் நானும் ரௌடி தான்” படத்தின் காட்சிகளை பயன்படுத்தியிருந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் “10 கோடி” நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நயன்தாரா அவர்கள் இதை பற்றி தனது வலைதள பதிவில் தெரிவிக்கும் போது, ஆவணப்படத்திற்கு தேவைப்படும் “3 நொடி” காட்சிக்காக “10 கோடி” வேண்டும் என்று தனுஷ் தரப்பில் கேட்டதாக தெரிவித்திருந்தார். நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் மீது அவருக்கு இருக்கும் தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக நடிகர் தனுஷ் இப்படி செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

சென்ற “ஆகஸ்ட் மாதம்”, இசையமைப்பாளர் ஒருவர், நயன்தாரா மீது, ஒரு பிராண்டை பிரபல படுத்துவது போல வெளியிட்ட “ரீல்ஸ்” காக “கேரளா நீதிமன்றத்தில் புகார்” அளித்த மனுவிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த மனுவில் நயன்தாரா அவர்கள் இசையமைப்பாளரின் அனுமதி இல்லாமல் அந்த காணொளியில் இசையை பயன்படுத்தியிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த “கேரள கீழ் நீதிமன்றம்” நயன்தாராவுக்கு “எதிராக தீர்ப்பு வழங்கியது”. தீர்ப்பில் ஒரு படத்தின் பாடலை அனுமதி இல்லாமல் பன்னாட்டு நிறுவனத்திற்கு விளம்பரம் செய்யும் விதமாக பயன்படுத்தியது குற்றம் என்றும் உடனடியாக அந்த ரீல்ஸ் “நீக்கப்பட” வேண்டும் என்றும் உத்தரவிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த தீர்ப்பை கவனித்து தான் தனுஷ், நடிகை நயன்தாரா மீது வழக்கு தொடர்த்துள்ளாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Previous articleஐடெலின் புதிய அறிமுக.. இனி ரூ 999 கே மொபைல்??
Next articleஇந்த 17 நாட்கள் வங்கி செயல்படாது!! மக்களே நோட் பண்ணிக்கோங்க!!