தமிழக அரசு மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு “வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம்”(UYEGP) திட்டத்தின்கீழ் ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
UYEGP திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் உதவி வருகின்றன. பெரும்பாலும் படித்த பட்டதாரிகளும் அவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
இதன் மூலம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மக்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. தமிழக இளைஞர்கள் ஒருவருக்குத் தலா ரூ. 15 லட்சம் வரை கடன் பெற முடியும். மாநில அரசு திட்ட மதிப்பீட்டு 25% வரை மாநில உதவி மானிய உதவி வழங்குகிறது.
இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்:
1)தொழில் முனைவோர் குறைந்தபட்சமாக 8-ஆம் வகுப்பு கல்வி முடித்திருக்க வேண்டும்.
2 )18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
3)குடும்ப ஆண்டு வருமானம் ரூ 1.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4)இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு ஒரு நபர் மாநில அல்லது மத்திய அரசிடமிருந்து வேறு கடன் அல்லது மானியம் பெற்றிருக்கக் கூடாது.
பொதுத் திட்டங்களுக்கு 10% ஸ்பான்சர்ஷிப்பும், சிறப்புத் திட்டங்களுக்கு 5% ஸ்பான்சர்ஷிப்பும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய மக்களுக்கு ஏற்படும் வேலையில்லா திண்டாட்டங்களைக் குறைக்கும் வகையில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தை ஊக்குவிக்க, UYEGP திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆர்பிஐ விதிகளின்படி வழங்கப்படுகிறது.
இதற்குத் தேவையான ஆவணங்கள்:
1)அடையாளச் சான்றிதழ்.
2)கல்விச் சான்றிதழ்.
3)திட்ட வடிவம்.
4)இருப்பிடச் சான்று.
5)பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
6)மொபைல் எண்.
7)திட்டத்திற்குத் தேவையான ஆதாரங்கள் மதிப்பிடப்பட்ட செலவு.
இது முற்றிலும் தகவல் நோக்கத்திற்காக எழுதப்பட்டதாகும். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு இந்த “https://msmeonline.tn.gov.in/uyegp/” லிங்கைக் கிளிக் செய்யவும்.