“என்னது வீட்டில் அதிகமாக தங்கம் வைத்திருந்தால் அதற்கு வரி விதிக்கப்படுமா”! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
131
"If I keep more gold in my house, will it be taxed"! Announcement issued by the government!!
"If I keep more gold in my house, will it be taxed"! Announcement issued by the government!!

பொதுவாக, “தங்கம்” என்றாலே பல மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். முக்கியமாக திருமணங்கள், வீட்டு விசேஷங்கள் போன்ற பெரும்பாலான விஷயங்களுக்குப் பலர் தங்க நகைகளையே பயன்படுத்துகின்றனர். முக்கிய முதலீடுகளில் ஒன்றாகவும் தங்கம் பயன்படுகிறது. இப்படி, தங்கம் பல்வேறு வகைகளில் மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. ஆனால், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு சில விதிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.

மத்திய நேரடி வரிகள் வாரியம், வீட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே தங்கத்தை வைத்திருக்க முடியும் என்று கூறியுள்ளது. மேலும், எவ்வளவு தங்கம் இருந்தாலும் அதற்கான ஆதாரத்தை வைத்திருப்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது. திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்க முடியும். திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் வரையிலான தங்கத்தை வைத்திருக்க முடியும் என்று வருமான வரிச் சட்டம் கூறியுள்ளது. அதைப்போல், குடும்பத்தில் உள்ள ஆண்கள் 100 கிராம் தங்கத்தையே வைத்திருக்க முடியும்.

வரி வரிவிலக்கு வழங்கப்பட்ட தொழிலில் இருந்து வரும் வருமானம் – அதாவது, விவசாயம் போன்ற தொழில்களும் இதில் அடங்கும். இதன் வருமானத்திலிருந்து வாங்கும் தங்கத்திற்குச் சட்டபூர்வ மரபுரிமையின் மூலம் வரி விலக்கைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தங்கத்தை வைத்திருக்க வரி இல்லை என்றாலும், அதை விற்கும்போது வரி செலுத்துவது அவசியமாகும். 3 வருடங்களுக்குப் பிறகு தங்கத்தை விற்கும்போது, அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி(LTCG) விதிக்கப்படுகிறது. அதைப்போல், தங்க பத்திரங்களை வாங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்யும்போது, அது விற்பனையாளரின் வருமானத்தோடு சேர்க்கப்பட்டு, வரி விதிப்பின் விதிமுறைகளின்படி வரி விதிக்கப்படும். அதுவே தங்க பத்திரத்தை முதிர்வு வரை வைத்திருந்து விற்பனை செய்தால் அதற்கு எந்த ஒரு வரியும் கிடையாது.

Previous articleவங்காள தேசத்தில் வெடித்தது மத கலவரம்!! சிறுபான்மையினர் பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம்!!
Next article“ஐஸ்வர்யா ரஜினிக்கு பாதுகாப்பு வழங்கும் கனிமொழி”..