ஜெயம் ரவியின் உடைய படத்திற்காக யுகபாரதி எழுதிய பாடலை அப்படத்தை நீ இயக்குனர் மறுக்கவே, அதே பாடலை விஜய்க்கு கொடுத்து ஹிட் அடித்துள்ளார் பாடலாசிரியர் யுகபாரதி. இது குறித்த விரிவான தகவலை இச்செய்தி தொகுப்பில் காண்போம்.
ஜெயம் ரவியின் உடைய எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்திற்காக இயக்குனர் மோகன் ராஜா ஒரு பாட்டினை கேட்க, சிச்சுவேஷனை கேட்டு ஸ்ரீகாந்த் தேவா ஒரு காதல் பாடலினை எழுதிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் பாடலாசிரியர் யுகபாரதியும் உடன் இருக்க. யுகபாரதி ‘கண்டேன் கண்டேன் உன் காதல் நான் கண்டேன்’ என எழுத, மோகன் ராஜா வார்த்தைகள் கொஞ்சம் டிரெண்டியா வேணும் அப்படின்னு செல்கிறார். உடனே யுகபாரதி ‘கண்டேன் கண்டேன்’ என்கிற வார்த்தையை எல்லாவற்றையும் தூக்கி விட்டு ஐயோ ஐயோ உன் கண்கள் அய்யய்யோ என்று சில வார்த்தைகளை மட்டும் மாற்றி அமைத்து கொடுத்துள்ளார்.
இந்த பாடல் அங்கிருந்த இயக்குனர் மோகன் ராஜாவிற்கு மட்டுமின்றி ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் மிகவும் பிடித்த போனது. மேலும் அந்த பாடல் படத்தின் வெற்றிக்கு தூணாக அமைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாடலை யுகபாரதி எழுதிய அதே நாள் ஈவினிங் வித்யாசாகர், யுகபாரதிக்கு கால் பண்ணி ஏதாவது பாட்டு பல்லவி வச்சிருக்கியா? என்று கேட்டுள்ளார். உடனே இருக்கிறது எனக்கு ஒரு தான் முதலில் எழுதிய கண்டேன் கண்டேன் உன் காதல் நான் கண்டேன் என்ற பாடலை கொடுத்திருக்கிறார். மேலும் இந்த பாடல் ஆனது தளபதி விஜய் நடிப்பில் உருவான மதுரா திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டது.அவர் எதிர்பார்த்தது போலவே இந்த பாடல் வரிகள் இருந்ததால் வித்யா சாகர் ஷாக் ஆகிவிட்டார். இந்த பாடலும் தளபதிக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.