தளபதி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! 69 படத்தின் அதிரடி அப்டேட்!!

0
93
Happy news for Thalapathy fans!! 69 Movie Action Update!!
Happy news for Thalapathy fans!! 69 Movie Action Update!!

தளபதி அவர்கள் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் “தி கோட்”. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘தி கோட்’ படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு அவர் முழுநேரமாக அரசியலில் ஈடுபடுவதாக கூறினார். அதனையடுத்து அக்டோம்பர் மாதம் 27-ம் தேதி முதல் மாநாடு வெற்றிகரகமாக நடத்தி முடித்தார். மேலும் அவர் அரசியல் வரும் முன்பு கடைசி படம் ஓன்று நடித்து வருகிறார். பெயர் இன்னும் வைக்காமல் தளபதி 69 என்ற தலைப்பில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சென்னையில் செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அனிமல் பட புகழ் பாபி தியோல், மமிதா பைஜூ மற்றும் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் நடிக்கவுள்ளனர். அதற்கான புதிய அப்டேட் கே.வு.என் நிறுவனம் அறிவித்துள்ளது அதில், அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறதாம். மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அறிவிப்பாக வெளியாக உள்ளதாக தெரிவித்தனர்.

Previous articleசச்சினை காலி செய்ய காத்திருக்கும் கோலி!! அடிலெய்டு மைதானத்தில் நடக்க போகும் சம்பவம்!!
Next articleஇஷான் கிஷான் வெளியேற காரணம் ஹர்திக் தான்!! அணிக்குள் ஏற்பட்ட சர்ச்சை வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!!