யாரு யாரு-க்கு வெள்ள நிவாரண நிதி கிடைக்கும்!! ஒரே குழப்பமா இருக்கு!!

0
97
Who will get the flood relief fund!! There is only confusion!!
Who will get the flood relief fund!! There is only confusion!!

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட முதலமைச்சர் கூறி இருந்தார்.

இந்த நிலையில், வெள்ள நிவாரணம் எந்தெந்த மாவட்டங்களில், யார் யாருக்கு கிடைக்கும் என்பதில் தெளிவற்ற, குழப்பமான சூழல்தான் நிலவுகிறது. வெள்ள நிவாரணம் குறித்து அரசு சார்பில் தெளிவான இறுதி அறிவிப்பு வெளியிடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த கனமழை அனைத்து மாவட்டத்திலும் பெய்துள்ளது. எனவே அனைத்து மாவட்ட கலெக்டர் அதிக மழை பெய்த இடத்தில் ஆராய்ந்து தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Previous articleசொத்து வாங்க விற்க.. 2 லட்சம் வரை மட்டும் தான் அனுமதி!! வருமான் வரித்துறையின் அதிரடியான ரூல்ஸ்!!
Next article13 வயது சிறுவனின் விளையாட்டு விபரீதம்: பலூனின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நவீன்!