நடிகர் கமலுக்காக அழுத என் குடும்பம்!! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!!

0
86

2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக உருவானவர் தான் கார்த்திக் சுப்புராஜ்.

 

கார்த்திக் முதலில் ஜிகர்தண்டாவை இயக்க நினைத்தார் ஆனால் திட்டத்திற்கு நிதியளிக்க முடியவில்லை. அதன் பிறகு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பீட்சாவுக்கான கதையைக் கொண்டு வந்தார் . இப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக விளங்கி வருபவர்கள். அப்படிப்பட்ட ரஜினி ரசிகர்கள் நடிகர் கமலஹாசனுக்காக அழுத சோகம் அரங்கேறி இருக்கிறது.

 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பணத்தை மட்டுமே பார்க்கும் நிலையில் சினிமா ரசிகனாக இவர் மட்டுமே அனைத்து நல்ல படங்களையும் பார்ப்பதாக தெரிவித்து இருந்தார். அந்த வகையில் கமலஹாசனுடைய அன்பே சிவம் திரைப்படமானது அனைவருக்கும் பிடித்த நிலையில் இவருக்கு மகாநதி திரைப்படமே மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்திருந்தது.

 

1994 ஆம் ஆண்டு சந்தானபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுகன்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.மகாநதி படத்தை எடுத்துக் கொண்டால் ரொம்ப எளிமையான குடும்ப படம். அதில் அவ்வளவு சுவாரசியமாக காட்சிகளை வைத்தது சாதாரண விஷயம் அல்ல.

 

  • குறிப்பாக, அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் பொழுது ஒரு ஒரு காட்சிக்கும் என் குடும்பமே அழுதது என ஒரு பேட்டியில் சொல்கிறார் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள்.
Previous articleஉடல் எடை குறைய சுகர் கண்ட்ரோல் ஆக.. வொயிட் ரைஸ் Vs சப்பாத்தி எது சிறந்தது?
Next articleகுழந்தைகளை டார்கெட் செய்யும் ஹார்ட் அட்டாக்!! இது தான் முக்கிய காரணம்!!