Punjab:அமிர்தசரஸ் பொற்கோவிலில் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கிறது.
சீக்கியர்களின் புனித தலமாக இருக்கும் அமிர்தசரஸ் பொற்கோவில் வளாகத்தில் சிரோமணி அகாலி தளம் தலைவராக இருப்பவர் சுக்பீர் பாதல்.
இவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவர். இவர் சம்பவத்தன்று சுக்பீர் பாதல் சீக்கிய மத தண்டனையாக பொற்கோவில் வாசலில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த முதியவர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் மீது சுட முயன்று இருக்கிறார். அப்போது சுக்பீர் பாதல் அருகில் இருந்த நபர்கள் அந்த நபரை ஓடி வந்து பிடித்துள்ளார்கள். அப்போது அந்த நபர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டதில் பொற்கோவில் சுவரில் பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
உடனே அக்கோவிலில் இருந்த நபர்கள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த நபர் சுக்பீர் பாதல் மீது கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன?, இந்த துப்பாக்கி சூடு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது கனடா நாட்டில் காலிகஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியர்கள் மீது வன்முறைத் தாகுதலை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த துப்பாக்கி சூட்டில் அவர்களின் தலையீடு இருக்குமோ என மத்திய உளவுத்துறை ஆய்வு நடத்தி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு நடந்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.