சென்னையில் சிக்கிய கஞ்சா கண்டெய்னர்!! பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி!!

0
115
845 kg of ganja was found in a container truck near Ampathur, Chennai
845 kg of ganja was found in a container truck near Ampathur, Chennai

chennai:சென்னை அம்பத்தூர் அருகே கண்டெய்னர் லாரியில்  845 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கஞ்சா போன்ற போதை புழக்கம் அதிக அளவில் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம்.

நேற்று நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கஞ்சா பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்து போலீசார் கைது செய்தனர். இந்த போதை பழக்கத்திற்கு அதிக அளவில் இளைஞர் அடிமையாகி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு கண்டெய்னர் லாரி வந்து இருக்கிறது. அதை மடக்கி பிடித்த போலீசார்  கண்டெய்னரை சோதனை செய்ய தொடங்கினார்கள். அப்போது மூட்டை மூட்டையாக கஞ்சா கிடைத்துள்ளது. அதில் 845 கிலோ கஞ்சா இருப்பதை கண்டு பிடித்தார்கள். இதன் மதிப்பு சுமார் 2.5 கோடி இருக்கும்.மேலும் அந்த லாரியில் வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மிகப் பெரிய அளவில் கஞ்சா போதை பொருள் சிக்கி இருந்தால்  பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த லாரி ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்துள்ளது சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கஞ்சாவை கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கிறது ஏன் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous articleதமிழக அரசு அறிவித்த நிவாரண நிதி போதுமானது அல்ல!! ராமதாஸ் வலியுறுத்தல்!!
Next articleஜெயஷ்வாலிடன் என்னையே நான் பார்த்தேன்..கே எல் ராகுல் உருக்கம்!! பிங்க் பால் குறித்து உண்மையை உடைத்த கே எல்!!