இயக்குனர் சிகரத்தால் சினிமா உலகிற்கு கிடைத்த அற்புத நடிகர்கள்!!

0
169

மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் தான் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள்.திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. இவர் இயக்கத்தில் வெளியான ஒரு சில சிறப்பு படங்கள் :-

✓ அபூர்வ ராகங்கள்

✓ புன்னகை மன்னன்

✓ எதிர் நீச்சல்

✓ வறுமையின் நிறம் சிகப்பு

✓ உன்னால் முடியும் தம்பி

தமிழ் திரையுலகை தீர்மானித்த முக்கிய முன்னணி நடிகர்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் அறிமுகப்படுத்திய முத்துக்களின் பெயர்கள் :-

✓ கமலஹாசன்

✓ ரஜினிகாந்த்

✓ சிரஞ்சீவி

✓ நாசர்

✓ பிரகாஷ்ராஜ்

✓ விவேக்

✓ சரத்பாபு

✓ சார்லி

✓ எஸ் பி பாலசுப்ரமணியம்

மேலும் இவர் 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாது, அவரது நண்பருமாக இருந்தவர். நடிகையரில், சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

Previous articleஷேவிங் செய்யாமல் அக்குள் முடியை அகற்ற வேண்டுமா? அப்போ “தேன் + எலுமிச்சை” போதுமே!!
Next articleதிருச்சி எஸ்.பி. வருண்குமார் – சீமான் மோதல் திரும்ப மோதல்!!