Assam:உணவகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து இருக்கிறது அசாம் அரசு.
இந்தியாவில் மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகள் சமீப காலங்களாகவே எழுந்து வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சியை உணவகங்களில் விற்பனை செய்ய தடை விதித்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில்கள் அருகில் மாட்டிறைச்சிக்கு உண்பதற்கு தடை விதித்து இருந்தது. இந்த காட்டுபாடு மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யதுள்ளது.
அந்த வகையில் மாட்டிறைச்சி தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைக்க அசாம் மாநில் அமைச்சரவையில் முடிவு செய்துள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது உள்ள கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் 2021 இன் படி, இந்துக்கள் மற்றும் ஜெயின், சீக்கியர்கள் என மாட்டிறைச்சி உண்ணாத மதத்தினர் வசிக்கும் பகுதியில் இருந்து 5 கிமீ தொலைவு வரையில் எந்த ஒரு மாட்டிறச்சி கடைகளும் இயங்கக்கூடாது.
மேலும் மாட்டிறைச்சிக்கு உண்ணவும் வாங்கவும் தடை என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது அது குறித்து அம்மாநில முதலைச்சர் ஹிமந்தா சர்மா அறிவித்த அறிக்கையில் அசாம் மாநிலத்தில் எந்த உணவகத்திலும், ஹோட்டலிலும் மாட்டிறைச்சி வழங்கப்பட மாட்டாது என்றும், எந்த பொது விழா அல்லது பொது இடங்களிலும் மாட்டிறைச்சி வழங்கப்படாது என முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் “பீப் சாப்பிட வேண்டும் என்றால் பாக்கிஸ்தானுக்கு குடியேறுங்கள்” என பிஜுஷ் ஹசாரிகா தந்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்து இருப்பது சர்ச்சையாகி வருகிறது.