சமீப காலங்களில் வெளியாகியுள்ள படங்களுக்கு ரசிகர்கள் தரும் சோசியல் மீடியா விமர்சனங்களால் வெளியாகும் படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் முக்கிய காரணமே சோசியல் மீடியா விமர்சனங்கள் தான் எனத் தாயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் முறையிட்டது.
அதற்கு நீதிமன்றம், ” கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதிக்க முடியாது” எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
இச்சமயத்தில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா, ரங்கநாத், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்த “மிஸ் யூ” என்றத் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர், ” முதல் நாளே எழும் விமர்சனங்கள் குறித்து தங்கள் கருத்து யாது? என வினாவியுள்ளார்.
அதற்கு சித்தார்த் அவர்கள்,” நான் நடித்த திரைப்படத்தைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்” என நான் ஒருபோதும் கூற மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.
ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு ‘விமர்சிக்க வேண்டாம்’ எனக் கூறியதால் நீங்கள் அதை செய்யாமல் இருக்கலாம் அது உங்கள் விருப்பம்.
ஆனால் நான் என்னுடைய படத்தை நீங்கள் விமர்சிக்கலாம் என்று தான் கூற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். மற்றப் படத்திற்காக எந்தவித கருத்துக்களையும் என்னால் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.”ஒரு நடிகராக இப்படத்தில் என்னுடைய நடிப்பு நன்றாக உள்ளது அல்லது இல்லை என்றுக் கூறும் கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதைத் தவிர தியேட்டரில் பாப்கார்ன் விலை அதிகரிப்பு பற்றியெல்லாம் என்னால் எவ்வாறு கேள்வி கேட்க முடியும் என்று கேட்டவுடன்
சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்கள் இவற்றைக் கேட்க வேண்டும் என்றால் ‘வாங்கிய சம்பளத்திற்கு அவர்கள் கருத்து மட்டும்தான் பேசிக் கொண்டிருக்க முடியும்’ எனப் பதில் அளித்துள்ளார்.
மேலும், “நீங்கள் என் படத்தை வந்து பாருங்கள். ‘உங்களுக்குப் பிடித்திருந்தால் நன்றாக உள்ளது, இல்லையேல் நன்றாக இல்லை’ என்று எழுதுங்கள். காசு கொடுத்து படம் பார்க்கும் உங்களுக்கு முழு உரிமை உண்டு அதை நான் தடுக்க இயலாது” என அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரிதளவும் பகிரப்பட்டு வருகிறது.