உங்கள் குலதெய்வத்தை இப்படி வழிபட்டால் கேட்டது அனைத்தும் கிடைக்கும்!! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!!

0
117
If you worship your family deity like this, you will get everything you asked for!! Must know!!
If you worship your family deity like this, you will get everything you asked for!! Must know!!

நம் பாட்டன் பூட்டான் காலத்தில் இருந்தே குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது.தங்களுக்கு ஆயிரம் இஷ்ட தெய்வம் இருந்தாலும் முதலில் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் உங்கள் குலதெய்வம்.

நீங்கள் குலதெய்வத்தை வணங்கினாலே மற்ற அனைத்து கடவுளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.நம் குடும்பத்தை காக்கும் குலதெய்வத்தை விட சிறந்த சக்தி இவ்வுலகில் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமாவாசை நாட்களில் குலதெய்வ கோயிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபட்டு வந்தால் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் தங்களை விட்டு நீங்கிவிடும்.சிலருக்கு குலதெய்வம் உள்ள ஊர் வெகு தொலைவில் இருக்கும்.அவர்கள் தங்கள் வீட்டிலேயே குலதெய்வத்தின் படத்தை மாட்டி வைத்து தினமும் பூஜை செய்து வரலாம்.

உங்கள் குலதெய்வ கோயிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை வீட்டிற்கு எடுத்து வந்து மஞ்சள் துணியில் போட்டு மூட்டை கட்டி வீட்டு வாசலில் கட்டினால் கண் திருஷ்டி,செய்வினை,பில்லி சூனியம் அனைத்தும் நீங்கிவிடும்.

குலதெய்வ வழிபாடு:

அமாவாசை நாளில் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும்.இந்நாளில் மண் விளக்கு,தீப எண்ணெய்,திரி,கற்பூரம்,ஊதுபத்தி போன்ற பூஜை பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு பொங்கல் வைக்க தேவைப்படும் பொருட்களை வாங்கி சென்று குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.மாத மாதம் செய்ய இயலாதவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது குலதெய்வ கோயிலுக்கு சென்று இவ்வாறு வழிபட வேண்டும்.

Previous articleஇந்த பிரச்சனையெல்லாம் இருப்பவர்கள் கட்டாயம் நெல்லிக்காயை தொட்டுக் கூட பார்த்து விடாதீர்கள்!!
Next articleஇனி கண்ணாடி போட தேவையில்லை.. 80 வயதிலும் கண் பார்வை ஷார்ப்பாக தெரிய நாள்தோறும் இதை பாலோ பண்ணுங்க!!