2019 ஆம் ஆண்டு பிரதிப் ரங்கநாதன் ‘கோமாளி’ படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகினார். சினிமாத் துறையில் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக கால்தடம் பதித்தவர்.
இதைத் தொடர்ந்து அவர் இயக்கி 2022 இல் வெளிவந்த திரைப்படமான ‘லவ் டுடே’ படத்தில் இவரே ஹீரோவாகவும் பணியாற்றியுள்ளார். இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமானது உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிப் படமாகியது. லவ் டுடே படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இவர் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், குறும்படம் தொடர்பாக அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வளர்ந்து வரும் இயக்குனர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ அதிக சிஜி வேலைகளின் காரணமாக திரைப்படம் வெளியாக சற்றுத் தாமதமாகும் என்றார்.
அச்சமயத்தில் அங்குள்ள இயக்குனர்களை பார்த்து, ” நானும் குறும்பட போட்டியில் கலந்து உள்ளேன். ஆனால் என் படைப்பு குறும்பட போட்டியில் வெற்றி பெறவில்லை” என்றார்.ஒருவர் மட்டுமே வெற்றிபெறும் நிலையில் மற்றவர்கள் எல்லாம் லூசர்கள் தான். ” அப்படி பார்த்தால் நானும் ஒரு லூசராகத்தான் இருந்திருக்கிறேன்.
அதனால் அவற்றைக் குறித்து எல்லாம் கவலைப்பட வேண்டாம் இதெல்லாம் உண்மை இல்லை என்று மனம் உடைந்த இயக்குனர்களை பார்த்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாடி உள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.