மத்திய அரசின் தொடர் வரி அதிகரிப்பு காரணமாக திணரும் பாமர மக்கள். அத்தியாவசிய வீட்டு பொருட்களுள் எண்ணெயும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு லிட்டர் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையொட்டி 20 ரூபாய் சேர்த்து 130 ரூபாயாக உயர்ந்தது.
தீபாவளி பண்டிகை முடிந்ததை தொடர்ந்து எண்ணெய் விலை மீண்டும் குறையும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சித் தரும் வகையில் மேலும் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் கவலைக்குள்ளாகி உள்ளனர். இந்தியாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சில வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு இறக்குமதி வரியும் விதிக்கப்படுகின்றன. இந்த வரியானது பொருள்களுக்கு ஏற்ப மாறுபடும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுள் சமையல் எண்ணெய்களும் அடங்கும்.
சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா எண்ணெய் தேவைகளுக்கு 70% இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறது. மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து நமக்கு அதிக அளவில் பாமாயில் இறக்குமதி ஆகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே சமையல் எண்ணெயின் விலை 40 ரூபாய் ஏறியுள்ளது. இதைக் குறித்து சேலம் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ” மத்திய அரசின் வரி உயர்வு, மலேசியாவில் இருந்து வரும் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்வது மற்றும் சில நாடுகளுக்கு இடையேயான போர் போன்ற காரணங்களால் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது என்றனர்.
இந்த விலை உயர்வானது சில மாதங்களுக்கு தொடரும் எனவும், விலை குறைய இப்போதைக்கு வாய்ப்பில்லை எனவும் அதிருப்தி அளித்துள்ளனர். இதனால் இல்லத்தரசிகள் படும் கவலைக்கு உள்ளாகி உள்ளனர்.