Supreme Court: மத்திய அரசு பணியில் சேர்ந்தவுடன் அவரது சான்றிதல்களை 6 மாதத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளில் தேர்வுகள் மூலம் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலை பெற்று வருகின்றனர். இவ்வாறு வேலை பெறுபவர்களின் ஆவணங்களை ஆறு மாதத்திற்குள் சரிபார்க்க செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆவணங்கள் சர்பார்ப்பில் பலவித முறைக்கேடுகள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், மேற்குவங்கத்தில் 1985 ஆம் ஆண்டு ஒருவர் மத்திய அரசில் பனி வாங்கியுள்ளார். இவரது சான்றிதழ்கள் அனைத்தும் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து சரிபார்க்கப்பட்டு, இவர் இந்திய குடிமகன் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது அறியாமல் இத்தனை ஆண்டு காலம் இவர் மத்திய அரசு பணியில் தான் வேலை செய்து வந்துள்ளார். இருப்பினும் இவருக்கான அனைத்து சலுகைகளும் கிடைத்தும் வந்துள்ளது.
இத்தனை ஆண்டுகாலம் சரிபார்க்காமல் இருந்தது குறித்தும் கண்டித்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் இது குறித்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நடைபெற்றது. இந்த வழக்கு இன்று அமர்வுக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியதாவது, இனி மத்திய அரசு பணிக்கு தேர்வு அடைந்தவர்களின் சான்றிதழ்களை குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்குள் சரி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் முறைக்கேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியும்.