பொடுகு தொல்லையால் ஒரே அரிப்பா இருக்கா!! நிரந்தரமாக சரி செய்ய வேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!  

0
104
Dandruff problem is the only itch!! Use neem leaves like this to fix it permanently!!
Dandruff problem is the only itch!! Use neem leaves like this to fix it permanently!!

DANDRUFF: தலையில் பொடுகு இருந்தால் அதிகளவு முடி உதிர்தல் ஏற்படும்.இந்த பொடுகுத் தொல்லைக்கு முழுமையான தீர்வாக வேப்பிலை மற்றும் குப்பைமேனி உள்ளது.இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள்.

TIPS 01

பொடுகை போக்கும் அற்புத வீட்டு வைத்தியங்கள்:

1)குப்பைமேனி இலை – கால் கப்
2)வேப்பிலை – கால் கப்
3)எலுமிச்சம் பழம் – ஒன்று

முதலில் கால் கைப்பிடி குப்பைமேனி இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து கால் கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் பாட்டு நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு பொருளையும் மிக்சர் ஜார் அல்லது உரலில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த விழுதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கனிந்த எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை பிழிந்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவிட்டு பிறகு தலைக்கு குளித்தால் பொடுகு பாதிப்பு நீங்கும்.

Tips 02

1)தயிர் – 5 தேக்கரண்டி
2)வேப்பிலை – அரை கப்

முதலில் பசும் பாலில் தயாரித்த கெட்டி தயிர் 5 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரை கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் 5 தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து விழுது பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.

இந்த விழுதை தலை முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால் பொடுகு பாதிப்பு முழுமையாக நீங்கும்.

Previous articleசெம்பு பாத்திரத்தில் இப்படி தண்ணீர் ஊற்றி அருந்தினால் கட்டாயம் நஞ்சாக மாறிவிடும்!! பெரும் ஆபத்து மக்களே உஷார்!!
Next articlePCOD/PCOS நிரந்தரமாக குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை பலோ பண்ணுங்க!!