மத்திய அரசின் பாரத் நெட் திட்டம் தமிழகத்தில் ரத்து!.

0
135

தமிழகத்தில் பாரத் நெட் திட்டம் என்ற இணையதள டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்த பாரத் நெட் திட்டம் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.1,950 கோடி ஒதுக்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைக்கேடு இருப்பதாக அரப்போர் இயக்கம் மற்றும் திமுகவினர் குற்றச்சாட்டை எழுப்பினர்.

எனவே டெண்டர் விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காததால் மத்திய அரசு இந்த டெண்டரை ரத்து செய்துள்ளது.மேலும் கருவிகள் கொள்முதல் செய்வதில் உள்ள குறைகளை அகற்றி மீண்டும் டெண்டர் விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Previous articleதான் சாகபோவதாக மனைவிக்கு போன் செய்த கணவன்! புத்திசாலி மனைவியால் மீட்கப்பட்ட ருசிகர சம்பவம்!
Next article30 வருடங்களாக தன்னை பெண் என நினைத்து வாழ்ந்து வந்த ஆண்!