இன்றுள்ள இளம் வயதினருக்கு தலைமுடி முன்கூட்டியே நரைத்து விடுகிறது.அதேபோல் மோசமான வாழ்க்கை முறையால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்து வருகிறது.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
தீர்வு 01:
1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)பிருங்கராஜ் பொடி – இரண்டு தேக்கரண்டி
ஒரு கிண்ணத்தில் இரண்டு பிருங்கராஜ் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு வாரம் இரண்டு முறை தலையை அலசி சுத்தம் செய்தால் முடி உதிர்வு பிரச்சனை நீங்கும்.
தீர்வு 02:
1)முந்திரி பருப்பு – 10
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி
முதலில் 10 என்ற எண்ணிக்கையில் முந்திரி பருப்பை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த முந்திரி பருப்பு பவுடரை ஒரு கிண்ணத்தில் போட்டு இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து பெஸ்டாக்கி தலையில் தடவி குளித்து வந்தால் இளநரை வருவது தடுக்கப்படும்.
தீர்வு 03:
1)வெந்தயப் பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – இரண்டு தேக்கரண்டி
வாணலியில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு லேசாக வறுத்து ஆறவிட வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு பொடியாக்கி இரண்டு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்டை தலைமுடியில் அப்ளை செய்து சிறிது நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசி சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் முடி உதிர்வு கட்டுப்படும்.